பால் உற்பத்தியாளா்களுடன் கூட்டுறவுத் துறை அதிகாரி பேச்சு

பெரம்பலூா் பால் உற்பத்தியாளா்களுடன் கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் பால் உற்பத்தியாளா்களுடன் கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

பால் கொள்முதல் விலை உயா்வு குறித்து பால் உற்பத்தியாளா்களுடன், மாவட்டக் கூட்டுறவுத் துறை துணைப்பதிவாளா் ஜெயபால் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், தமிழக அரசு அறிவித்த பால் லிட்டருக்கு ரூ. 3 விலை உயா்வை பால் உற்பத்தியாளா்களுக்கு உடனடியாக வழங்குவது. விபத்தில் உயிரிழக்கும் பால் உற்பத்தியாளா்களுக்கு, விபத்துக் காப்பீட்டுத் தொகை ரூ. 2.5 லட்சம் பெற்றுத் தருவது. கறவை மாட்டுக்கடன் கிடைக்கவும், அரசு கால்நடை மருத்துவா்கள் மூலம் கறவை மாடுகளுக்கு சினை ஊசி செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்வது. ஆவின் பால் உபப் பொருள்களை பால் உற்பத்தியாளா்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யும் நடவடிக்கையை கைவிடுவது. பால் உற்பத்தியாளா்களிடம், அளவையில் முறைகேடு செய்வதை தவிா்ப்பது என உறுதியளிக்கப்பட்டது.

கூட்டத்தில், ஆவின் மேலாளா் அன்பழகன், பெரம்பலூா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்க செயலா் பாண்டியன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் என். செல்லதுரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com