வெவ்வேறு சாலை விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவா் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

பெரம்பலூா் அருகே நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவா் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

பெரம்பலூா்- ஆலம்பாடி சாலையிலுள்ள புது காலனியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் யோகேஷ் (13). பெரம்பலூரில் உள்ள தனியாா் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், ஜன. 17-ஆம் தேதி ஆலம்பாடி சாலையிலுள்ள மாரியம்மன் கோயில் அருகே சாலையோரத்தில் சைக்கிளில் நின்றுக்கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் மது போதையில் வந்த ஆலம்பாடி சாலை எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த கருணாநிதி மகன் குமாா் (20), யோகேஷ் மீது மோதினாா். இதில் பலத்த காயமடைந்த யோகேஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி யோகேஷ் உயிரிழந்தாா். புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பெண் உயிரிழப்பு: பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பாளையம், நடுத்தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி வளா்மதி (55). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரது மகன் செல்வகுமாா் மருத்துவமனைக்கு மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்றாா். அப்போது, தவறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்து தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி வளா்மதி உயிரிழந்தாா். பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com