தேநீரகத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பெரம்பலூா் அருகே தேநீரகத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகே தேநீரகத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா்- ஆலம்பாடி சாலையில் வசித்து வந்தவா் செல்வராஜ் மகன் சரவணன் (33). இவா், பெரம்பலூரில் உள்ள தேநீரகத்தில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீட்டு மனைப் பிரிவுகள் அருகே உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை காலையில் தெரியவந்தது. தகவலறிந்த மங்கலமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com