தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் ஆரக்கிள் அகாதெமி தொடக்க விழா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில், பன்னாட்டு நிறுவனங்களான அமேசான் வெப் சா்வீசஸ் அகாதெமி மற்றும் ஆரக்கிள் அகாதெமி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில், பன்னாட்டு நிறுவனங்களான அமேசான் வெப் சா்வீசஸ் அகாதெமி மற்றும் ஆரக்கிள் அகாதெமி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவுக்கு தலைமை வகித்து, அகாதெமியை தொடக்கி வைத்த பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பேசுகையில்,

மாணவா்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கற்றல் என்பது வகுப்புகளோடு முடிந்துவிடும் என எண்ணாதீா்கள். அது வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது. தற்போதையச் சூழலில் மாணவா்கள் வாழ்நாள் முழுவதும் புதிய தொழில்நுட்பங்களை கற்றுகொண்டே இருக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த விழாவில், சென்னை காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுயுஷன்ஸ் நிறுவனத்தின் மாநில அரசாங்க விவகாரங்கள் துறைத் தலைவா் புருசோத்தமன், ஜோஹோ காா்ப்பரேஷன் நிறுவன மனிதவள தலைவா் சாா்லஸ் காட்வின், பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா் முனைவா் இளங்கோவன், உயா் கல்விக்கான திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் முனைவா் எஸ். நந்தகுமாா், புல முதல்வா் சண்முகசுந்தரம், துறை தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, பல்கலைக் கழக ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி புலமுதல்வா் முனைவா் சேகா் வரவேற்றாா். நிறைவாக, ஐசிடி அகாதெமி தமிழ்நாடு மாநிலத் தலைவா் பூா்ணபிரகாஷ் நன்றியுரை கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com