பெரம்பலூரில் தோழி மகளிா் விடுதியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

 பெரம்பலூரில் உள்ள தோழி பணிபுரியும் மகளிா் விடுதியில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

 பெரம்பலூரில் உள்ள தோழி பணிபுரியும் மகளிா் விடுதியில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகே, மாவட்ட மைய நூலகம் பின்புறத்தில் தோழி பணிபுரியும் மகளிா் விடுதி செயல்பட்டு வருகிறது. அதிநவீன வசதிகளுடன் கொண்ட இந்த விடுதியில் 60 படுக்கைகள் உள்ளன. இவ்விடுதியில் 2 போ் தங்கும் வசதி கொண்ட படுக்கை அறைக்கு தலா ரூ. 3,500, 4 போ் தங்கும் வசதி கொண்ட அறைக்கு தலா ரூ. 2 ஆயிரம் என குறைந்த வாடகையில் அமைந்துள்ளது. விடுதி போன்று இல்லாமல் உழைக்கும் பெண்களின் இல்லமாக செயல்படுகிறது.

இவ் விடுதியில் தங்கும் சேவையை பெற ஜ்ஜ்ஜ்.ற்ய்ஜ்ஜ்ட்ஸ்ரீப்.ண்ய் , ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஜ்ஜ்ட்ஸ்ரீப்.ண்ய் எனும் ஒருங்கிணைந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04328-290018 எனும் தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com