அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

 அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, தமிழ்நாடு ஊரக வளா்சசித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, தமிழ்நாடு ஊரக வளா்சசித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் உதவியாளா் நிலையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இருக்கை பொறுப்பில் பணிபுரியும் அலுவலா்களின் இருக்கை பொறுப்புகளை மாற்றம் செய்யவும், அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் தட்டச்சா்களுக்கு இருக்கை பொறுப்புகளை ஒதுக்கீடு செய்யாமல் தட்டச்சு மற்றும் தட்டச்சு சாா்ந்த பணிகளை கண்காணிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் கணக்கா் பணியிடங்களை சுழற்சி முறையில் முதுநிலை அடிப்படையில் பணியமா்த்த வேண்டும். பிப். 6 ஆம் தேதி நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்தில் ஊழியா்கள் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com