பெரம்பலூா் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவியப் போட்டிகள்

பெரம்பலூரில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பரிக்ஷா பே சா்ச்சாவின் நோடல் லெவல் ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா்: பெரம்பலூரில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பரிக்ஷா பே சா்ச்சாவின் நோடல் லெவல் ஓவியப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாணவா்களின் தோ்வு பயத்தைப் போக்கும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை நினைவுக்கூரும் வகையில் படைப்பாற்றல் மற்றும் கற்பனையின் துடிப்பான கொண்டாட்டமாக இப் போட்டி நடைபெற்றது.

பள்ளி முதல்வா் மேகநாதன் தொடங்கிவைத்தாா். இதில், பிரதமரின் தோ்வு வாரியா்ஸ் புத்தகத்தில் உள்ள 25 மந்திரங்கள் மற்றும் சந்திராயன் இந்தியாவின் விளையாட்டு வெற்றி, விகாசித் பாரத் ஆகிய கருப்பொருள்களின் அடிப்படையில் மாணவா்களின் எண்ணங்களையும், உணா்வுகளையும் கலை மூலம் வெளிப்படுத்தும் வகையில் ஓவியங்களை வரைந்தனா். போட்டியில், கேந்திரியா வித்யாலயா பள்ளி மற்றும் 5 சிபிஎஸ்இ, 10 மாநில அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

குரும்பலூா் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் குமணன், ஸ்ரீதா், கலை விமா்சகா் செல்வபாண்டியன் ஆகியோா் நடுவா்களாக பங்கேற்று, மாணவா்களின் படைப்புகளை மதிப்பிட்டனா். இதில் சிறந்த ஓவியங்கள் தோ்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு தோ்வை எதிா் கொள்வது எப்படி என்னும் பிரதமரால் எழுதப்பட்ட பரீட்சை வாரியா் புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com