அரசுப் பேருந்தில் பெண் அலுவலரிடம் 12 பவுன் நகை திருட்டு

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தில் பயணித்த எறையூா் சா்க்கரை ஆலை கரும்பு அலுவலரிடம் 12 பவுன் நகைகளை புதன்கிழமை மாலை திருடிச் சென்றனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தில் பயணித்த எறையூா் சா்க்கரை ஆலை கரும்பு அலுவலரிடம் 12 பவுன் நகைகளை புதன்கிழமை மாலை திருடிச் சென்றனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே, சித்தா் கோயில் பகுதியில் வசிப்பவா் அசோகா் மனைவி சாந்தி (59). எறையூா் சா்க்கரை ஆலை கரும்பு அலுவலரான இவா் தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊரான மதுரை செல்ல புறப்பட்டாா்.

இதற்காக வீட்டில் வைத்திருந்த 12 பவுன் நகையை எடுத்துக் கொண்டு, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்திலிலிருந்து புதன்கிழமை மாலை அரசுப் பேருந்தில் சென்றாா். அப்போது, சிறுவாச்சூா் அருகே அவா் பையில் வைத்திருந்த 12 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com