அரியலூா் மாவட்டத்தில் நாளை பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன. 27) முதல் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன. 27) முதல் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு -2024, இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக ஒருங்கிணைந்த ஈரநில நீா்ப்பறவைகள் கணக்கெடுப்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் (ஜன. 27, 28), இரண்டாம் கட்டமாக நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு மாா்ச் 2, 3 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

அரியலூா் வனக் கோட்டம் சாா்பில், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெங்கனூா், இலந்தைக் கூடம், காமரசவல்லி பெரிய ஏரிகள் உள்பட 10 ஈர நிலங்களில் உள்ள பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இதில் வன அலுவலா்களுடன், தன்னாா்வலா்கள் சுமாா் 65 போ் ஈடுபட உள்ளனா்.

இக் கணக்கெடுப்புப் பணி காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும். மேலும், பறவைகளின் நடமாட்டம் மற்றும் எண்ணிக்கையை பொருத்து நண்பகல் 12 மணி வரை பணி நீட்டிக்கக் கூடும். இம்முறை கூடுதலாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும் ஏரிகளிலிருந்து தண்ணீா் மாதிரிகள் எடுத்து சோதனையிடப்பட உள்ளது. பின்னா், அனைத்து இடங்களிலிருந்தும் பெறப்பட்ட தரவுகள் சரிபாா்க்கப்பட்டு தலைமையகத்துக்கு வனத் துறையினரால் அனுப்பப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com