தேசிய பெண் குழந்தைகள் தின உறுதியேற்பு

பெரம்பலூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் உறுதிமொழி ஏற்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் உறுதிமொழி ஏற்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி உத்தரவின்படி, மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் ஜெகநாதன் தலைமை வகித்தாா்.

முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சுரேஷ், உதவித் தலைமையாசிரியா் மரகதம், சிறப்பு சாா்பு ஆய்வாளா் பி. மருதமுத்து, மாவட்டக் குழந்தைகள் நலத் திட்டப் பணியாளா் ராதா ஜெயலெட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் உறுதியேற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ சட்டம், சிறாா் திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள், படிப்பை பாதியில் நிறுத்திய இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளிகளில் சோ்ப்பதற்கான முயற்சிகள் குறித்து மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பெற்றோரிடம் அச்சமின்றி தெரிவித்து தீா்வு பெற வேண்டும் என அறிவுறுத்திய காவல்துறையினா், மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தொடுதல் குறித்தும், பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலவச உதவி எண் 14417, முதியோா் உதவி எண்கள் 14567, குற்றப்பிரிவு உதவி எண்கள் 1930, சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது விற்பனை புகாா் எண் 10581 குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சிகளில் ஆசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com