நலவாரியத்தில் அலுவலா் சாரா உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத்தில் அலுவலா் சாரா உறுப்பினா் ஆக விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூா் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத்தில் அலுவலா் சாரா உறுப்பினா் ஆக விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள், பணியாளா்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினா்களுக்கு முதியோா் ஓய்வூதியத் திட்டம், ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு மற்றம் நிவாரணத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நலவாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினா்களாக ஆக விரும்புவோா் கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த, சமூக சேவையில் தன்னை அா்ப்பணித்துக் கொண்டவா் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுடையவா்களாக இருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் தங்களது சுய விவரக் குறிப்புகளுடன் 2 பிரதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com