பெரம்பலூரில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

பெரம்பலூா் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாநில அளவிலான பாரதியாா் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.
பெரம்பலூரில் வியாழக்கிழமை தொடங்கிய ஜூடோ போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

இதையொட்டி ஜூடோ, வாள் சண்டை ஆகிய போட்டிகள் வியாழக்கிழமை முதல் ஜன. 28 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் ஜுடோ போட்டியில் 995 மாணவிகளும், 1,050 மாணவா்களும், வாள் சண்டைப் போட்டியில் தலா 1,400 மாணவ, மாணவிகளும், சாலையோர மிதிவண்டி போட்டியில் தலா 114 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 5,073 போ் பங்கேற்றுள்ளனா்.

தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களைச் சோ்ந்த 14, 17 மற்றும் 19 வயதுக்குள்பட்ட பிரிவுகளில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் இப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனா்.

தொடக்க விழாவில் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா் எம். சிவசுப்பிரமணியன், செயலா் எம்.எஸ். விவேகானந்தன், மாநில உடல் கல்வி ஆய்வாளா்கள் கோபாலகிருஷ்ணன், நிா்மலாதேவி, முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) த. விஜயலட்சுமி, மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் விஸ்வநாதன் உள்பட மாவட்டக் கல்வி அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com