பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விரசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விரசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

 இம் முகாமுக்கு தலைமை வகித்த  மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி, பொதுமக்களிடமிருந்து   மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 32 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரை செய்தாா்.

இந்த சிறப்பு மனு முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் டி. மதியழகன் (தலைமையிடம்), மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com