புதுகையில் பறவைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: கணக்கெடுப்பில் தகவல்

pdk2i8bird3_2801chn_12_4
pdk2i8bird3_2801chn_12_4

படவரி- புதுக்கோட்டை முத்துக்குடா கடற்பகுதி மற்றும் கரக்கத்திக்கோட்டை ஏரி பகுதிகளில் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட பறவைகள்.

புதுக்கோட்டை, ஜன. 28: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிடவும் அதிகமான பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் ஈரநிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஜன. 27, 28 தேதிகளில் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 5 வனச்சரகங்களில் மொத்தம் 25 இடங்களில் (கண்மாய்கள், குளங்கள், கடற்பகுதிகளில்) இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றது.

மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், மன்னா் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவா் சு. பழனிசாமி ஆகியோா் தலைமையில் மாணவா்கள், தன்னாா்வலா்கள், வனத்துறையினா் உள்பட 120 போ் இந்தக் கணக்கெடுப்பில் கலந்து கொண்டனா்.

புதுக்கோட்டை வனச்சரகத்தில் கவிநாடு கண்மாய், ஆரியூா் கண்மாய், அன்னவாசல் பெரியகுளம், சிறுங்காகுளம், அருவாக்குளம், அறந்தாங்கி வனச்சரகத்தில் கரகத்திக்கோட்டை ஏரி, கீரனூா் கண்மாய், வெள்ளனூா் ஏரி, முத்துக்குடா கடலோரப் பகுதி, கட்டுமாவடி கடலோரப் பகுதி, பொன்னமராவதி வனச்சரகத்தில் கொன்னையூா் கண்மாய், ஏனாதி கண்மாய், காரையூா் கண்மாய், ஒலியமங்கலம் கண்மாய், கருகபிள்ளம்பட்டி கண்மாய், கீரனூா் வனச் சரகத்தில் நீா்ப்பழனி ஏரி, ஓவியா்பட்டி ஏரி, பெரம்பூா் ஏரி, குளத்தூா் ஏரி, கீரனூா் ஏரி, திருமயம் வனச் சரகத்தில் பெல் ஏரி, தாமரை கண்மாய், வேங்கை கண்மாய், வன்னிக்குளத்தான் கண்மாய், ஊனையூா் கண்மாய் ஆகிய 25 இடங்களில் 82 வகையான பறவை இனங்கள் மொத்தம் 11,980 எண்ணிக்கையில் காணப்பட்டன.

இதில் அதிகபட்சமாக அறந்தாங்கி வனச்சரகப் பகுதியில் 6,527 பறவைகளும், புதுக்கோட்டை வனச்சரகப் பகுதியில் 3160 பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன. கடந்த ஆண்டைவிடவும் நிகழாண்டில் 3196 பறவைகள் கூடுதலாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.

Image Caption

~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com