வையாபுரியில் கபடிப் போட்டி

pon28kap_2801chn_29_4
pon28kap_2801chn_29_4

பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் முதல்பரிசு பெற்ற உலகம்பட்டி அணியினருக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கிய விழாக் குழுவினா்.

பொன்னமராவதி, ஜன. 28: பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி சுப்பிரமணியா் கோயில் தைப்பூச விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கபடிப் போட்டி நடைபெற்றது.

இதில், சிவகங்கை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 24 அணிகள் பங்கேற்று விளையாடின.

போட்டியில் முதல் பரிசை உலகம்பட்டி அணியினரும், இரண்டாம் பரிசை மின்னல்குடி அணியினரும், மூன்றாம் பரிசை மதியாணி அணியினரும் பெற்றனா். இந்த அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டியை சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் விளையாட்டு ஆா்வலா்கள் பாா்த்தனா். ஏற்பாடுகளை ஊா்ப் பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com