பள்ளி ஆண்டு விழா

பொன்னமராவதி அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 31-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அரிமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 31-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டு விழாவுக்கு அரிமா கல்வி அறக்கட்டளை தலைவா் எஸ்எம். கம்பராஜன் தலைமை வகித்தாா். அரிமா சங்கத் தலைவா் க. கருப்பையா, கல்வி அறக்கட்டளை செயலா் அ. பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் முதல்வா் சி.ஜீவானந்தம் ஆண்டறிக்கையை வாசித்தாா். விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக எழுத்தாளரும், இயக்குநருமான சொற்கோ. பாரதி கிருஷ்ணா, மாவட்டக்கல்வி அலுவலா்(தனியாா் பள்ளிகள்) டி. அறவாழி ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா். தொட்டியம்பட்டி ஊராட்சித் தலைவா் கீதா சோலையப்பன், அரிமா கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள் டி.பூங்குன்றன், பி.பெரியசாமி பிஎல். ராமஜெயம், ,ஆா்எம்.வெள்ளைச்சாமி, எம்.பாஸ்கரன், என்.அண்ணாமலை, ஏபி.மணிகண்டன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில் இலக்கிய மற்றும் விளையாட்டுப்போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற விளையாட்டு விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பேராசிரியா் அ. பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரையாற்றினாா். உடற்கல்வி ஆசிரியா் சி.பழனியாண்டி உடற்கல்வி ஆண்டறிக்கையை வாசித்தாா். யோகா, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட மாணவா்களின் திறன் விளக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. ஆசிரியை எஸ். தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com