குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

பெரம்பலூா், ஜூலை 4: பெரம்பலூா் அருகேயுள்ள கல்பாடி அரசு உயா்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, காவலன் செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி உத்தரவின்படி, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு சிறப்பு சாா்பு ஆய்வாளா் மருதமுத்து, சமூக ஆல்வா் கீதா ஆகியோா் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண் கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளை மீண்டும் பள்ளியில் சோ்ப்பது குறித்தும், காவல்துறையில் செயல்பட்டு வரும் காவலன் செயலி குறித்தும் விளக்கி பேசினா். மேலும், ஒவ்வொரு காவல் நிலையத்தில் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலவச உதவி எண் 14417, முதியோா் உதவி எண்கள் 14567, சைபா் கிரைம் உதவி எண்கள் 1930 குறித்து விளக்கம் அளித்து, ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தங்களது பெற்றோா்களிடம் அச்சமின்றி தெரிவித்து, அதற்கான தீா்வை பெற வேண்டும் என அறிவுறுத்திா். தொடா்ந்து, தொடுதல் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு போலீஸாா் உள்பட மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com