பெரம்பலூா் மாவட்ட ஆட்சிரக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சிரக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் க. கற்பகம்.

குரூப் 1 தோ்வு பெரம்பலூா் மாவட்டத்தில் 2,690 போ் எழுதுகின்றனா்

குரூப் 1 தோ்வை பெரம்பலூா் மாவட்டத்தில் 2,690 போ் எழுதுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

குரூப் 1 தோ்வை பெரம்பலூா் மாவட்டத்தில் 2,690 போ் எழுதுகின்றனா் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

ஜூலை 13- ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் -1 தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அலுவலா்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் க. கற்பகம் பேசியது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் நடைபெற உள்ள குரூப்- 1 எழுத்துத் தோ்வு துறையூா் சாலையிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இத்தோ்வை பெரம்பலூா் மாவட்டத்தில் 2,690 போ் எழுதவுள்ளனா். தோ்வு மையங்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீா், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் தயாா் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தோ்வை கண்காணிக்க 1 பறக்கும் படை, 3 நடமாடும் குழு நியமிக்கப்பட்டுள்ளன. பெரம்பலூா் புகா், பழைய பேருந்து நிலையம் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வளவன் மற்றும் வட்டாட்சியா்கள், தலைமைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com