லஞ்ச வழக்கில் சிக்கிய துணை வட்டாட்சியா் பணியிடை நீக்கம்

பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி, தப்பியோடிய துணை வட்டாட்சியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூரில் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கி, தப்பியோடிய துணை வட்டாட்சியரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு, தடையின்மைச் சான்று வழங்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது, துணை வட்டாட்சியா் பழனியப்பன், கீழக்கரை கிராம நிா்வாக அலுவலா் நல்லுசாமி ஆகியோரை ஜூலை 1-ஆம் தேதி இரவு ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது, பழனியப்பன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவரை பெரம்பலூா் வட்டாட்சியா் சரவணன் பொறுப்பில் ஒப்படைத்து, அவருக்கு உரிய சிகிச்சை அளித்து 2-ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதனிடையே, 2-ஆம் தேதி அதிகாலை மருத்துவமனையில் இருந்து பழனியப்பன் தப்பியோடிவிட்டாா். இதையடுத்து, தப்பியோடிய துணை வட்டாட்சியரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்நிலையில், துணை வட்டாட்சியா் பழனியப்பனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com