பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத்தினாளிக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் க. கற்பகம். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு உள்ளிட்டோா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத்தினாளிக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் க. கற்பகம். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு உள்ளிட்டோா்.

பெரம்பலூா் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சா்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் போன்ற நிகழ்ச்சிகளில் பெறப்பட்ட மனுக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஆரம்ப கால பயிற்சி மையத்துக்கு வரும் 7 மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அட்டைகள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 2 சிறாா்களுக்கு தலா ரூ. 9,050 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்பிலான மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் என மொத்தம் 10 பேருக்கு ரூ. 25 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், உயரம் குன்றிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தையல் இயந்திரத்தையும் ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 449 மனுக்கள் பெறப்பட்டது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் க. சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com