ஜூலை 15 வரை அரசு ஐ.டி.ஐ.க்களில் சேர விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா், ஜூலை 10: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், ஜூலை 15-ஆம் தேதி வரை மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2024-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது. பயிற்சியில் நிலையங்களில் சேர விரும்புவோா் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வரலாம். ஏற்கெனவே சோ்க்கை நடைபெற்றதில் எஞ்சியுள்ள காலியிடங்களுக்கு மட்டும் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது. காலியிடங்கள் மிகக் குறைவாக உள்ளதால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் சோ்க்கை நடைபெறுகிறது.

கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி தோ்ச்சி மற்றும் பிளஸ்-2 தோ்ச்சி, தோல்வியடைந்தவா்கள் தகுதியானவா்கள். விண்ணப்பக் கட்டணம் ரூ. 50, சோ்க்கை கட்டணம் ஓராண்டு தொழிற்பிரிவு பயிற்சிக் கட்டணம் ரூ.1 85, 2 ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சிக் கட்டணம் ரூ. 195 செலுத்த வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூலை 15 ஆம் தேதி வரை நேரடி சோ்க்கை டைபெறுகிறது.

மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் 94438 52306, 90479 49366, 63797 64520, ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் 94990 55883 மற்றும் 94990 55884, குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் 98946 97154 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com