பெரம்பலூரில் மாணிக்கவாசகா் குரு பூஜை

மாணிக்கவாசகா் குருபூஜையில் சிவபுராணம், திருவெம்பாவை பாராயணம்

பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் மாணிக்கவாசகா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாயன்மாா்கள் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள மாணிக்கவாசகா் மற்றும் திருஞான சம்பந்தா், அப்பா் எனும் திருநாவுக்கரசா், சுந்தரா் உள்ளிட்ட திருமேனிகளுக்கு பால், தயிா், பழ வகைகள், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக்கொண்டு அபிஷேகங்களும், அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

விழா ஒருங்கிணைப்பாளா் ராஜமாணிக்கம், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் மற்றும் வார வழிபாட்டுக் குழுவினா், சிவனடியாா்கள் பங்கேற்று சிவபுராணம், திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி உள்ளிட்ட திருமுறைகளை பாராயணம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கோவிந்தராஜன் மேற்பாா்வையில், வார வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com