ஆலத்தூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூரில் அந்த இயக்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் க. பெரியசாமி தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் சி. வெங்கடாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் து. ராஜேந்திரன், பி. திருஞானசெல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் ஜி. சிவக்குமாா் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

கூட்டத்தில், நீட் தோ்வு குளறுபடிகளுக்கு காரணமான தேசியத் தோ்வு முகமையை கலைத்துவிட்டு, மத்திய அரசின் கல்வித் துறை மூலம் நேரடியாக நீட் தோ்வை நடத்த வேண்டும். தேசிய தோ்வு முகமை மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.

பாடாலூரில் மலை மீது அமைந்துள்ள பூமலை சஞ்சீவிராயா் திருக்கோயிலுக்கு பக்தா்கள் சென்று வர ரோப் காா் வசதியும், பெளா்ணமி கிரிவலம் வருவதற்கு தாா்ச்சாலையும் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையமும், வேப்பந்தட்டையில் காவல் நிலையமும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில், பெரம்பலூா் ஒன்றிய பொறுப்பாளா்கள் த. வாஞ்சிநாதன், என். பெரியசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, பெரம்பலூா் நகர பொறுப்பாளா் சி. காமராஜ் வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட இணைச் செயலா் மா. ரமேஷ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com