இணையவழி குற்றங்கள் தடுப்பு 
விழிப்புணா்வுப் பேரணி

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், இணைய வழி குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல்துறை சாா்பில் இணையவழி குற்றங்கள் மற்றும் அதை தடுப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணியை, துணை கண்காணிப்பாளா் பழனிசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பெரம்பலூா் பாலக்கரையில் தொடங்கிய இப்பேரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கே.கே.நகா், வழியாகச் சென்று துறைமங்கலம் பகுதியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் சென்ற கல்லூரி மாணவ, மாணவிகள், காவல்துறையினா், இணையவழி குற்றங்களால் ஏற்படும் விபரீதங்கள் மற்றும் அதை தடுப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டுச் சென்றனா். மேலும், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்கள், ஓட்டுநா்களிடம் காவல்துறையினா் விநியோகித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com