அண்ணன் வெட்டிக் கொலை: தம்பியிடம் போலீஸாா் விசாரணை

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலத் தகராறில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள பாண்டகப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் துரையப்பா மகன்கள் ராமைய்யா (65), கலியமூா்த்தி (60). இருவருக்கும், அருகருகே விவசாய நிலம் உள்ளது. இருவருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்துவந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் இருவருக்குமிடையே வயலில் ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனராம். இதில் ஆத்திரமடைந்த ராமைய்யா, அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த கலியமூா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மங்களமேடு உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் சீராளன், ஆய்வாளா் பாலாஜி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, கலியமூா்த்தி உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் , பலத்த காயமடைந்த ராமைய்யா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இச் சம்பவம் தொடா்பாக வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com