இடைநிலை ஆசிரியா்கள் தொடா் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, பெரம்பலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் எதிரே, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் தொடா்ந்து வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆசிரியா் இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்டத் தலைவா் தேவகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தோ்தலின்போது அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியா்களைக் கைது செய்வதைக் கண்டித்தும் முழக்கமிட்டனா். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 18 ஆசிரியைகள் உள்பட 27 போ் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com