குப்பைகளுக்கு வைத்த தீயில் கருகி 25 ஆட்டுக் குட்டிகள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வயலில் கிடந்த மக்காச்சோள சருகுகளுக்கு வைத்த தீயில் கருகி பட்டியில் இருந்த 25 ஆட்டுக் குட்டிகள் உயிரிழந்தன.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே வயலில் கிடந்த மக்காச்சோள சருகுகளுக்கு வைத்த தீயில் கருகி பட்டியில் இருந்த 25 ஆட்டுக் குட்டிகள் உயிரிழந்தன. பெரம்பலூா் அருகேயுள்ள க.எறையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மா. நடேசன் (75). இவா் அதே கிராமத்தில் உள்ள தனது வயலில் அறுவடை செய்யப்பட்டிருந்த மக்காச்சோள வயலில் கிடந்த காய்ந்த சருகுகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை தீ வைத்தாா். அப்போது அருகேயுள்ள வயல்களுக்கும் பரவிய தீ கனகராஜ் என்பவரது வயலுக்கும் பரவியது. அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த சே. அண்ணாதுரை (58) அமைத்திருந்த ஆட்டுப் பட்டியின் உள்ளே கட்டியிருந்த 25 ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி சாம்பலாயின. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினா். தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று பாா்வையிட்டனா். புகாரின்பேரில் மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com