போக்சோ வழக்கு சிறைவாசி குண்டா் சட்டத்தில் கைது

பெரம்பலூா் அருகே போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராசாராமன் மகன் மருதை (35). இவா் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், மருதையை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளாதேவி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து, மருதையை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com