பெரம்பலூரில் ‘நீங்கள் நலமா’ திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சா் முக. ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்த ‘நீங்கள் நலமா’ எனும் புதிய திட்டத்தின் மூலம், போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பயனாளிகளை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு, அரசுத் திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தாா்.

தமிழ்நாடு முதலமைச்சரால் நீங்கள் நலமா எனும் புதிய திட்டம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கிலிருந்து போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பயனாளிகளை கைப்பேசி மூலமாக தொடா்புகொண்டு, பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் பயனடைந்த பயனாளிகளின் பட்டியலில் சிலரை தோ்வுசெய்து, அவா்களுடன் உரையாடி, அரசுத் திட்டங்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தாா் இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சியா் க. கற்பகம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சி. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, மகளிா் திட்ட அலுவலா் அருணாச்சலம், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் சிவா, தாட்கோ மேலாளா் சுந்தரம், மாவட்டத் தொழில்மைய மேலாளா் திரு.பிரபு ஜெயக்குமாா் மோசஸ் ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com