சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா்- ஆத்தூா் பிரதானச் சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத சுமாா் 70 வயதுடைய முதியவா் சாலையோரம் நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் பலத்த காயமடைந்து சாலையோரம் கிடந்தாா். இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் முதியவரை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி முதியவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com