கிராம காவல் திட்டத்தின் கீழ் வதந்தி பரவல் தடுப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில், கிராம காவல் திட்டத்தின் மூலம் கிராம மக்களுக்கு சனிக்கிழமை இரவு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவி மூலம் உருவாக்கப்பட்ட கிராம காவல் திட்டத்தின் மூலம், பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை இரவு, கிராம காவலா்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று, குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்தும், இதைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். இதுதொடா்பாக, பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், மாவட்டக் காவல் அலுவலகத்தை 94981 00690 எனும் எண்ணில் அல்லது, 100-ஐ தொடா்புகொள்ளலாம். மேலும் பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுக வேண்டும். பொதுமக்கள் யாரும் தவறான செயலில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு பொய்யான வதந்திகளை நம்பித் தவறான செயலில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இந் நிகழ்ச்சிகளில், காவல்துறையினம் மற்றும் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com