பெரம்பலூரில் மாவட்ட கலைப் போட்டிகள்

கலை பண்பாட்டுத்துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கான கலைப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கலைத் துறையில் சிறந்து விளங்கும் 17 முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்களை ஊக்கப்படுத்தும் வகையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய பிரிவுகளில், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சாா்பில், பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட அளவிலானப் போட்டிகளில், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய போட்டிகள் சனிக்கிழமையும், குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் உள்ளிட்ட போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இப் போட்டிகளில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா். இப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு முதல் பரிசு ரூ. 6 ஆயிரமும், 2 ஆவது பரிசு ரூ. 4,500, 3 ஆவது பரிசு ரூ. 3,500 விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும், மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற இளைஞா்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும், அரசு இசைப்பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com