நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை மூலம் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை மூலமாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை மூலமாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் ஆலத்தூா், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் நத்தம் இணைய வழிப் பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இ-சேவை மற்றும் ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ய்ண்ப்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய் மூலமாக விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் இணைய வழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நத்தம் பட்டா வழங்கப்படும். கிராம பகுதிகளுக்கான நத்தம் மனைப் பட்டாக்களை ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ எனும் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில், இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போா்டல் மூலம் பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். எனவே, பொதுமக்கள் இச் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com