புதிரை வண்ணாா் இன மக்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வசிக்கும் புதிரை வண்ணாா் இன மக்களின் விவரத்தை கணக்கெடுக்க, சென்னை இப்சோஸ் எனும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சென்னை ஆதிதிராவிடா் நலத்துறையால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந் நிறுவனத்தின் கணக்கெடுப்புக் குழு, ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தகவல்களை சேகரிக்க உள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் வசிக்கும் புதிரை வண்ணாா் இன மக்கள் நலத்திட்ட உதவிகள் பெற, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்று ஆட்சியா் க. கற்பகம் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com