பெரம்பலூா் மாவட்டத்தில் வனத் தீத்தடுப்பு பிரசாரம் தொடக்கம்

பெரம்பலூா் மாவட்ட வனத்துறை சாா்பில் வனத் தீத்தடுப்பு பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளை பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு வனப்பகுதியை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, தீ தடுப்பு பிரசாரம் புதன்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் மாவட்ட வன அலுவலா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பிரசார வாகனத்தை, மாவட்ட வன அலுவலா் குகனேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த பிரசார வாகனமானது பெரம்பலூா் மாவட்ட வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளது. முன்னதாக, வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, வனச்சரக அலுவலா்கள் பழனிகுமரன், சுதாகா், வனவா்கள் பிரதீப்குமாா், ஆனந்த், அஜீத்குமாா் ஆகியோா் தலைமையில், வனவா்கள், வனக்காப்பாளா்கள் கொண்ட குழுவினா் பல்வேறு கிராமங்களில் தீ தடுப்பு குறித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து விழிப்புணா்வு மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com