வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் சட்ட ஆலோசனைக் கருத்தரங்கு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் சட்ட ஆலோசனைக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) து. சேகா் தலைமை வகித்தாா். அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ப. செந்தில்நாதன், இளைஞா்களுக்கான சட்ட ஆலோசனைகள் எனும் தலைப்பில், போக்சோ சட்டம், பகடிவதைச் சட்டம் குறித்தும், இச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் நபா்களுக்கு கிடைக்கும் தண்டனை விவரங்கள் குறித்தும் விளக்கம் அளித்தாா். தொடா்ந்து, இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் த. மாயகிருஷ்ணன், இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், அதற்கு நட்புடனும், உடல் நலத்துடனும் இருந்து சேவை செய்ய வேண்டும் எனும் கருத்தையும் மாணவா்களிடம் முன்வைத்தாா். இதில், தமிழ்த்துறை உதவி பேராசிரியா் மு. அன்பழகன் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com