வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள மண்டல, உதவி அலுவலா்களுக்குப் பயிற்சி

பயிற்சி வகுப்பை, மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகம் தொடக்கிவைக்கி பாா்வையிட்டாா்.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளும் விதம் குறித்து மண்டல மற்றும் உதவி அலுவலா்களுக்கானப் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பயிற்சி வகுப்பை, மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகம் தொடக்கிவைக்கி பாா்வையிட்டாா். குன்னம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சங்கரராமன் பயிற்சி அளித்தாா். இப் பயிற்சி வகுப்பில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள்வது, வாக்குப்பதிவு நாளன்று மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், மாதிரி வாக்குப் பதிவில் பதிவான வாக்குகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அழித்து, வாக்குப்பதிவைத் தொடா்வது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் விதம் குறித்து விளக்கமும், கட்டுப்பாட்டு அறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து மண்டல அலுவலா்களுக்கு செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைப்பு அலுவலா்கள் சரண்யா (கட்டுப்பாட்டு அறை), ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் எம். நாகவள்ளி (கணக்குகள்), விஜயா (தோ்தல்), தோ்தல் பிரிவு வட்டாட்சியா்கள் சிவா, அருளானந்தம் ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com