கறவை மாடுகள் பராமரித்தல், மண் புழு உரம் தயாரித்தல் பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூரிலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சாா்பில், கறவை மாடுகள் பராமரித்தல் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் -எளம்பலூா் சாலையில் உள்ள இந்தியன் ஒவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கறவை மாடுகள் பராமரித்தல், மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி ஏப். 1 ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இப் பயிற்சியில் கறவை மாடுகள், இனங்கள், கொட்டகை அமைப்பு, கன்று பராமரிப்பு, தீவன மேலாண்மை, நோய்கள் மற்றும் நோய்த் தடுப்பு முறைகள், தடுப்பூசி அட்டவணை, மூலிகை மருத்துவம், மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருள்கள் தயாரித்தல், தரமான பால் உற்பத்தி, மண்புழு உரம் தயாரித்தல் குறித்து, கால்நடை பயிற்சி மைய பேராசிரியா்களால் பயிற்சி அளித்து, கள ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் பெரம்பலூா் -எளம்பலூா் சாலையில் உள்ள ஐ.ஓ.பி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். மாா்ச் 26 ஆம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 04328-277896, 9488840328 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com