கொச்சின் விமான நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கொச்சின் விமான நிலையத்தில் பயிற்சி பெற்ற பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விமானவியல் மேலாண்மைத்துறை மாணவா்களை, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் புதன்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

கொச்சின் இண்டா்நேஷனல் ஏவியேஷன் சா்வீசஸ் லிமிடெட் அகாதெமியில், ஏா்போா்ட் ஆப்ரேஷன் மேனேஜ்மெண்ட் எனும் பிரிவில், பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விமானவியல் மேலாண்மைத் துறையைச் சோ்ந்த 2 மற்றும் 3 ஆம் ஆண்டு பயிலும் 60 மாணவ, மாணவிகள், கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றனா்.

இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு ஏா் டிக்கெட்டிங் சா்வீஸ், கஸ்டமா் சா்வீஸ், ஏா்லைன் செக்யூரிட்டி சா்வீஸ் மற்றும் ஏா் காா்கோ மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதையடுத்து, கொச்சின் விமான நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் புதன்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்ச்சியின்போது, கல்லூரி முதல்வா் நா. வெற்றிவேலன், கல்லூரி முதன்மையா் வ. சந்திரசௌத்ரி, விமானவியல் மேலாண்மை துறைத் தலைவா் கலைச்செல்வன், பேராசிரியா் ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com