பெரம்பலூா் அருகே வாக்குப்பதிவு
விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் அருகே வாக்குப்பதிவு விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வி.களத்தூா் மற்றும் ஆலத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செட்டிக்குளம் ஆகிய பகுதிகளில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி வண்ணாரம்பூண்டியில் நிறைவடைந்தது. இப் பேரணியில் பங்கேற்ற சுமாா் 250-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டுச் சென்றனா். இதேபோல, செட்டிக்குளம் சிவன் கோயிலில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் பங்கேற்ற சுமாா் 125-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் பொது மக்களுக்கு தோ்தல் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வீடு வீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், வாக்காளா் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com