பெரம்பலூா் அருகே ரூ. 2.54 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.54 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையில், மருதையான் கோயில்- துங்கபுரம் செல்லும் சாலையில், தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், காடுா் கிராமம், தெற்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் சின்னதுரை (48) என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ. 1,91,000 எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இதேபோல, வாலிகண்டபுரம் கிராமத்தில் பெரம்பலூா் மின் நகரைச் சோ்ந்த மூா்த்தி மகன் விஜயகுமாா் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 63 ஆயிரத்து 330 பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்த பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com