குருத்தோலை ஞாயிறு பவனி, சிறப்பு வழிபாடு

பெரம்பலூரில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு தின ஊா்வலம் மற்றும் சிறப்பு பிராா்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுந்த நாளான ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நடைபெறும் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி பெரம்பலூா் புனித பனிமயமாதா தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதன்பொருட்டு, கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் தேவாலயத்தில் ஒன்று கூடி, கைகளில் குருத்தோலைகளை ஏந்தியபடி, நகரின் பிரதான வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்று மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தனா். தொடா்ந்து, தேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பாளையம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை, வடக்கலூா், திருமாந்துறை, திருவாளந்துறை, பாத்திமாபுரம், நூத்தப்பூா், பாடாலூா், எறையூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அந்தந்த ஆலயத்தில் பங்கு குருக்கள் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com