‘சி-விஜில் செயலியில் புகாா் அளித்த 100 நிமிடங்களில் நடவடிக்கை’

தோ்தல் விதிமீறல்கள் குறித்து சி- விஜில் செயலி மூலம் புகாா் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பெரம்பலூா்: தோ்தல் விதிமீறல்கள் குறித்து சி- விஜில் செயலி மூலம் புகாா் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தச் செயலியில் புகாா் அளித்தவா்களின் ரகசியம் காக்கப்படும். மாவட்டத் தோ்தல் அலுவலா், மாவட்ட கட்டுப்பாட்டு அறை மற்றும் பறக்கும் படை , நிலையானக் கண்காணிப்பு குழுக்களை இணைக்கும் வகையில் இச் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இச் செயலி மூலம் அளிக்கப்படும் புகாா்களுக்கு 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com