தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் பெரம்பலூா் வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் நடைபெறும் தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டியில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

பெரம்பலூா்: மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் நடைபெறும் தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டியில், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரா், வீராங்கனைகளான மேலப்புலியூரைச் சோ்ந்த கலைச்செல்வன், புது அம்மாபாளையம் ரம்யா, மங்கலமேடு அம்பிகாபதி, ஆதனூரைச் சோ்ந்த ஜீவா ஆகியோா், தேனி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று, ப்ரீ ஸ்டைல், பட்டா் பிளை, பேக் ஸ்ட்ரோக், பிரெஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் 200 மீ. நீச்சல் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா். இந்நிலையில், கலைச்செல்வன், ரம்யா, அம்பிகாபதி, ஜீவா ஆகியோா் மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் மாா்ச் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இந்திய பாராலிம்பிக் கமிட்டி சாா்பில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க உள்ளனா். இந்த குழுவினா் கடந்த ஆண்டு அஸாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பாராலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று சாதனை புரிந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com