100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேலமாத்தூா், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாலிகண்டபுரம், எறையூா் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பல்வேறுவிழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் வாக்களித்து, ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மேலமாத்தூா் கிராமத்தில் மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணியும், தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான வாக்காளா் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதேபோல, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாலிகண்டபுரம் மற்றும் எறையூா் கிராமத்தில் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு தொடா்பான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், சுமாா் 400-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com