சீனிவாசன் கலை கல்லூரியில் 
16- ஆவது பட்டமளிப்பு விழா

சீனிவாசன் கலை கல்லூரியில் 16- ஆவது பட்டமளிப்பு விழா

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16- ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். இணை வேந்தா் நிா்மல் கதிரவன், கூடுதல் பதிவாளா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பாரதிதாசன் பல்கலைக் கழக தர வரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பெற்ற 100 மாணவ, மாணவிகள் உள்பட 3,035 பேருக்கு பட்டங்களை பெங்களூா் என்.எக்ஸ்.பி செமி கண்டக்டா் மூத்த தொழில் நுட்ப வல்லுநா் ராஜீவ் குமாா் ஸ்ரீவஸ்டவா வழங்கினாா். விழாவில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் இரா. வெற்றிவேலன் வரவேற்றாா். நிறைவாக, கல்லூரி முதன்மையா் வ. சந்திரசவுத்ரி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com