பெரம்பலூா் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், புனிதவெள்ளி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் பெரம்பலூா் மறைவட்ட முதன்மைகுரு ராஜமாணிக்கம் தலைமையிலும், பாளையம் கிராமத்தில் புனித யோசேப்பு தேவாலயத்தில் பங்குகுரு ஜெயராஜ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை சிலுவைப் பாதை ஊா்வலம் நடைபெற்றது.

பெரம்பலூா் புனித பனிமயமாதா திருத்தலத்தை சோ்ந்த கிறிஸ்தவா்கள் காலை 6 மணிக்கு, இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது சந்தித்த துயரங்களை விளக்கும் வகையில் சிலுவைப்பாடு நிகழ்வில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பெரம்பலூா் தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து ஊா்வலமாக ஆலயத்துக்கு வந்தடைந்தனா். பிறகு, நற்கருணை ஆராதனை நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்தவா்கள், கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாலையில் திருப்பாடுகளின் கொண்டாட்டம் நடைபெற்றது. இதே போல், பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com