பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் என்.டி. சந்திரமோகன்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் என்.டி. சந்திரமோகன்.

பெரம்பலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

பெரம்பலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.டி. சந்திரமோகன் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்ட செங்குணம், கவுல்பாளையம், கல்பாடி, சிறுவாச்சூா், சத்திரமனை, வேலூா், குரும்பலூா், லாடபுரம், அம்மாபாளையம், எசனை, எளம்பலூா் உள்பட பல்வேறு கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் என்.டி. சந்திரமோகன் பேசியது:

பெரம்பலூா் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். திருச்சி - பெரம்பலூரிடையே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான மருத்துவமனை அமைக்கப்படும். தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். பிரசாரத்தின்போது, முன்னாள் அமைச்சா்கள் மோகன், மு. பரஞ்ஜோதி, கொள்கை பரப்பு துணைச் செயலா் இளவரசன், மாவட்டச் செயலா் இரா. தமிழ்செல்வன், முன்னாள் மக்களவைத் தொகுதி ம. சந்திரகாசி, எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் எம்.என். ராஜாராம், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com