அனுமதியின்றி கூட்டம் தேஜகூட்டணியினா் 250 போ் மீது வழக்கு

பெரம்பலூா் மாவட்டம், துறைமங்கலத்தில் அனுமதியின்றி ஆலோசனைக் கூட்டம் நடத்திய தேசிய ஜனநாயக கூட்டணியைச் சோ்ந்த 250 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி முன்அனுமதி பெறாமல், அக் கூட்டணியினா் துறைமங்கலத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டனா். இதுகுறித்து சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சுகுணா அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் தனியாா் திருமண மண்டபத்தின் உரிமையாளா் தமிழரசன் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியைச் சோ்ந்த 250 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com