பெரம்பலூரில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி சனிக்கிழமை ஆட்டோவில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் ஒட்டிய மாவட்ட தோ்தல் அலுவலா் க. கற்பகம்.
பெரம்பலூரில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி சனிக்கிழமை ஆட்டோவில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் ஒட்டிய மாவட்ட தோ்தல் அலுவலா் க. கற்பகம்.

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

பெரம்பலூரில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ரங்கோலி கோலம் வரைதல், துண்டுப்பிரசுரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலையில் உள்ள மைதானத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களால் 90 அடி பரப்பளவில் வரையப்பட்ட ரங்கோலி கோலங்களை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் க. கற்பகம், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணா்த்தும் வகையிலான உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பெரம்பலூா் நகரில் இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களிலும், பொதுமக்களின் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீா் கேன்களிலும் ஒட்டிய மாவட்ட தோ்தல் அலுவலா் கற்பகம், 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளா்களும் நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தோ்தலில் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா். நிகழ்ச்சியில், தோ்தல் விழிப்புணா்வு பணிக்கான ஒருங்கிணைப்பாளா் கோபால், வட்டாட்சியா் சரவணன் ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com